Posts

  ஸ்ரீ திருவாய் மொழி -1-3- பத்துடை யடியவர்க் கெளியவன் - ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க   உரை – ***- எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து , அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே , வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார் . பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே – 1-3-1-   பதவுரை பத்து உடை – பக்தியை யுடைய அடியவர்க்கு – அடியார்களுக்கு எளியவன் – ஸுலபனாயும் பிறர்களுக்கு – மற்றையோர்களுக்கு அரி...